Event Details :

வீறுகவியரசர் முடியரசனார் கவிதைகள் ஒப்பித்தல், பேச்சு, கட்டுரைப் போட்டிகள்

நிகழ்வு விவரம்:
தமிழ் வாழ்வே தம் வாழ்வாய் வாழ்ந்து, தமிழ்த்தாய்க்குப் பாமாலை பலசூட்டித் தம் கவிதைகளைக் கைவளாய் கொண்டு முத்தமிழுக்கு முடிசூட்டப் போராடி, தமிழுலகெங்கும் தாய்மொழி ஆட்சி திகழ, செந்தமிழர் ஆட்சி செழிக்க, மூவேந்தர் நிலம் மீட்க, சாதி மதமற்ற அறிவார்ந்த சமத்துவச் சமுதாயம் அமைய வீறுகவி பாடி, பாடியபடியே தம் இறுதி மூச்சுவரை கொள்கைக் குன்றமாக தன்மானத் தங்கமாக - தலை தாழாச் சிங்கமாக - கவிஞர்க்கும் கவிஞராக -
கவியுலக முடியரசராக - வீ றுக்கவியரசராக வாழ்ந்த முடியரசனார் கவிதைகளைக் பரப்பித் தமிழ்த் தொண்டாற்றும் வீறு கவியரசர் முடியரசன் அவைக்களம், மாணவர்களிடையே தமிழ்ப் பற்றை விதைத்து தமிழுணர்ச்சியை ஊட்டும் பொருட்டு ஆண்டு தோறும் நடத்தும் முடியரசனார் கவிதைகள் ஒப்பித்தல், பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளை இவ்வாண்டும் நடத்துகிறது.

நிகழ்வு:

பேச்சுப் போட்டி 

  • பிரிவு 'ஆ' - 6,7,8 வகுப்புகள்

தலைப்பு :

'முடியரசன் கவிதைகள்' நூலில் முடியரசனார் இயம்பும் இயற்கை

  • பிரிவு 'இ' - 9,10 வகுப்புகள்

தலைப்பு :

'தாய்மொழி காப்போம்' நூலில் முடியரசனார் மூட்டும் மொழிப் புரட்சி

  • பிரிவு 'ஈ' - 11,12 வகுப்புகள்

தலைப்பு :

'புதியதொரு விதி செய்வோம்' நூலில் முடியரசனார் வேண்டும் சமூகப்  புரட்சி

  • பிரிவு 'உ' - கல்லூரி, பல்கலைக்கழகத் துறைகள்

தலைப்பு :

'மனிதனைத் தேடுகிறேன்' நூலில் முடியரசனார் காணும் அரசியல் பார்வை

 

கட்டுரைப் போட்டி

  • பிரிவு 'ஆ' - 6,7,8 வகுப்புகள்

தலைப்பு :

'வள்ளுவர் கோட்டம்' நூலில் முடியரசனார் காணும் குறள் நெறிகள்

  • பிரிவு 'இ' - 9,10 வகுப்புகள்

தலைப்பு :

'காவியப் பாவை'  நூலில் முடியரசனார் உரைக்கும் தமிழ் உறவுகள்

  • பிரிவு 'ஈ' - 11,12 வகுப்புகள்

தலைப்பு :

'பூங்கொடி' நூலில், அறப்போர் நிகழ்த்திய காதையில் முடியரசனார் உணர்த்தும் தமிழ் வளர்ச்சிப் பணிகள்

  • பிரிவு 'உ' - கல்லூரி, பல்கலைக்கழகத் துறைகள்

தலைப்பு :

'கவியரங்கில் முடியரசன்' நூலில் முடியரசனார் சாற்றும் சாதி ஒலிப்புச் சிந்தனைகள்

நாள்: 19.08.2018

அறிவிப்பு மடல் இணைப்பு

இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை 12.08.2018 - ஆம் நாளுக்குள் அவைக்கள ஆட்சிக்குழு முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பாளர்கள்:

  • முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை  9486550725
  • முனைவர் தமிழ்முடியரசன்            9842589571
  • முனைவர் இரா.வனிதா                    9486002268
Event Address : அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி, வைரவபுரம், காரைக்குடி -630004
Event Website :
Contact Number :9489 804480
Contact Email :

Gallery



Youtube Video Click Here to play.

Download the
ClassCut App Today!

ClassCut is a treasure for students of all over colleges in India. It provides information of all events and functions of all the college campus in India.