Event Details :

20-ஆம்  நூற்றாண்டைச்சார்ந்த தமிழ்ப்புதின சிறுகதை ஆசிரியர்கள் பன்னாட்டுக்கருத்தரங்கம் -2018

அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்தும் பன்னாட்டுக்கருத்தரங்கம் - ஆகட்டு 2018

நிகழ்வு விவரம்: 
தேசியத் தர நிர்ணயக் குழுவின் மூன்றாம் சுற்றுத் தர மதிப்பீட்டில் A+(CGPA:3.64) தகுதி 
பெற்றதுடன் தமிழகப் பல்கலைக்கழகங்களிலேயே முதல் பல்கலைக்கழகமாகத் திகழும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையம் தமிழர் தம் பண்பாட்டினையும், வாழ்வியல் விழிமியங்களையும் ஆவணப்படுத்தல், மீட்டுருவாக்கம் செய்தல் என்னும் நிலையில் தமிழ்ப்பண்பாட்டு அருங்காட்சியம் அமைந்துள்ளதோடு, தமிழையும் தமிழர் தம் பண்பாட்டினையும் அடுத்தகட்ட வளர்ச்சி நிலைக்கு எடுத்துச்செல்லும் முகமாக பல்வேறு பன்னாட்டு, தேசியக் கருதரங்ககுகளை நடத்தி வருகின்றது.
அவ்வகையில் உலகம் முழுவதும் வாழ்ந்த வாழுகின்ற '20-ஆம் நூற்றாண்டச் சார்ந்த தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள்' என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்தவுள்ளது.


நிகழ்வு:
கருத்தரங்கக் கட்டுரைகள் தமிழ்நாட்டில் வாழும் புதின, சிறுகதைப் படைப்பாளர்கள் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா என உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள தமிழ்ப் புதின ஆசிரியராகவோ, சிறுகதை ஆசிரியராகவோ இருக்கலாம். கட்டுரைகள் ஆசிரியர் பிறப்பு, வாழ்க்கை வரலாறு, எழுதிய நூல்கள், அது குறித்த செய்திகள் என அமைய வேண்டும்.


கட்டுரை வந்து சேர வேண்டிய இறுதி  நாள்: 15.08.2018

கட்டணம்: ரூ.700


அறிவிப்பு மடல் இணைப்பு 

கருத்தரங்க ஒருங்கிணைப்புக் குழு: 

  • பேரா.என்.இராஜேந்திரன் அவர்கள், துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்.
  • பேரா.ஹா.குருமல்லேஷ் பிரபு அவர்கள், பதிவாளர் (பொ), அழகப்பா பல்கலைக்கழகம்.
  • முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை அவர்கள்,பேராசிரியர் மற்றும் இயக்குநர், தமிழ்ப்பண்பாட்டு மையம்,அழகப்பா பல்கலைக்கழகம். 
  • முனைவர் கா.கணநாதன் அவர்கள்,உதவிப்பேராசிரியர், தமிழ்ப்பண்பாட்டு மையம்.
Event Address : அழகப்பா பல்கலைக்கழகம் , கல்லூரி சாலை,அழகப்பாப்புரம் , காரைக்குடி -630003
Event Website :http://alagappauniversity.ac.in/academic/department/about/2
Contact Number :94865 50725
Contact Email :pavaisenthamizh17@gmail.com

Gallery



Youtube Video Click Here to play.

Download the
ClassCut App Today!

ClassCut is a treasure for students of all over colleges in India. It provides information of all events and functions of all the college campus in India.